நீலகிரி மாவட்டம் உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைத்து தரவேண்டுமென பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.
உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட சோலடா கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பள்ளி கட்டடத்தை சீரமைத்து, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டி வலியுறுத்தி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.