பட்டாவுக்காக பரிதவிப்பு : 6 தலைமுறைகளாக தொடரும் போராட்டம் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டாவுக்காக பரிதவிப்பு : 6 தலைமுறைகளாக தொடரும் போராட்டம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ராயபுரம் தொகுதியில் வசிக்கும் மக்கள் 6 தலைமுறைகளாக பட்டாவிற்காக அலைக்கழிக்கபட்டு வருகிறார்கள். பட்டா வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சென்னையில் பூர்வகுடி மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்பு என கூறி மக்களை வெளியேற்றுவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறுத்தி அச்சுறுத்துவது என அந்த பட்டியல் நீள்கிறது. இதுபோதாதென்று, பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமலும் தமிழக அரசு தற்போது அலைக்கழித்து வருகிறது…

ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போஜராஜன் நகர், பெரியபாளையத்தம்மன் கோவில், காத்பாடா, ஸ்டான்லி நகர், லெபர் லேன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பல முறை ஆட்சிகள் மாறி, பல்வேறு தலைவர்கள் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தாலும், இந்த பட்டா பிரச்னைக்கு மட்டும் இதுவரை ஒரு விடியல் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் ராயபுரம் தொகுதி மக்கள்.

எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சியினர் ராயபுரம் தொகுதிக்கு வருவார்கள். இந்த முறை சர்வ நிச்சயமாக பட்டா வழங்கிவிடுவோம் என உறுதியளிப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் வெற்றிப்பெற்றவர்களையும் பார்க்கவே முடியாது. பட்டா பிரச்னை பழையபடியே கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

பணம் இருப்பவர்கள் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து பட்டா வாங்கி விடுகின்றனர். ஆனால், கூலி வேலை பார்க்கும் தங்களுக்கு அதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாததால் இதுவரை பட்டா பெற முடியவில்லை என ஆதங்கத்துடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டா மட்டும் இப்பதி மக்களின் பிரதான பிரச்னை இல்லை. அதை தாண்டியும், குடிநீர் பிரச்னை, கால்வாய் பிரச்னை, கழிவுநீர் தேக்கம், சுகாதார சீர்கேடு என அடுத்தடுத்து பல பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடமே உள்ள நிலையில், மீண்டும் பழைய வாக்குறுதிகளோடு வேட்பாளர்கள் இப்போதே வரத் தொடங்கி விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையாவது தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். தங்கள் நிலத்திற்கு பட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் ராயபுரம் பகுதி மக்கள் காத்துள்ளனர். இப்போதைக்கு அந்த மக்களால் முடிந்தது நம்புவதும், காத்திருப்பதும் மட்டும்தான்…

 

Tags: Bhojarajan NagarPeriyapalayathamman TempleGathpadaStanley NagarLeber LaneChennaiRayapuramPatta issue
Share
Tweet
SendShare
Previous Post

புதுக்கோட்டை அருகே மகப்பேறு உதவித்தொகை வழங்கியதில் ரூ. 20 லட்சம் மோசடி!

Next Post

உதகை அருகே பள்ளி கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல் – மாணவர்கள் போராட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies