இத்தாலி தலைநகர் ரோமிலிருந்து சீனாவின் ஷென்ஸன் நகர் நோக்கிச் சென்ற விமானத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ரோமிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.55 மணிக்கு விமானம் புறப்பட்டது. சிறிதுநேரத்தில் அதில் பறவை மோதியதில், விமானத்தின் வலதுபுறம் என்ஜின் உள்ள பகுதியின் இறக்கை தீப்பற்றி எரிந்தது.
விபரீதத்தை உணர்ந்த விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து மீண்டும் ரோம் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினார். நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த 265 பேரும் உயிர்தப்பினர்.