தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் - அண்ணாமலை
Feb 9, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Nov 13, 2024, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி  விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.

கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: guindydoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality HospitaltamilnaduDMKTAMILNADU LAW AND ORDERstalin
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை : இதுதான் போலி திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா? – எல்.முருகன் கேள்வி

Next Post

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் – அரசு மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

Related News

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி -கல்லூரி மாணவியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய கணவன்

ஜப்பான் தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ள சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அழிவுகரமான கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்திய மத்திய அரசு!

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை – இலங்கை தமிழர்கள் வேதனை

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

திரைப்பட பாடல்களுக்கு ஒருமணி நேரம் இடைவிடாமல் நடமானடிய மாணவர்கள்!

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

புதுக்கோட்டையில் தாய்மாமன்கள் கொண்டு வந்த சீர்வரிசையை கண்டு வியப்படைந்த பொதுமக்கள்!

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம் – கடம்பூர் ராஜு

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சி – கண்டு ரசித்த மக்கள்

ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் ஜென்-சி தலைமுறையினரின் அறிவுத்திறன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies