ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 66 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 66 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் 64 புள்ளி 71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வயநாடு தொகுதியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இடதுசாரி முன்னணி சார்பில் சத்யன் மோகேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விறுவிறுப்பாக நடந்து முடிந்த வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 64 புள்ளி 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.