பிரேசிலில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
ஜி20 மாநாடு கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ தலைமை தாங்கவுள்ளார்.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தமது பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை ஜி20 மாநாட்டில் எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வேதம் பயின்று வரும் பிரான்ஸ் நாட்டு மக்கள், வேத மந்திரங்களை முழங்கி பிரதமரை வரவேற்றனர்.