பிரதமர் மோடி தலைமையிலான , மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 32% லிருந்து 42% ஆக உயர்த்தியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்தள்ள பதிவில், 2004-14 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதி பகிர்வு ரூ. 94,977 கோடி ஆக இருந்ததாக தெரிவித்துள்ளளார்.
அதேவேளையில் 2014-2024 ஆண்டுகளில் , 207% அதிகரித்து ₹2,92,015 கோடியாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.