ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை எனவும், ஒவ்வொருவரும் தனது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.