ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் பகுதியில் கொட்டித் தீர்த்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதனால், ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் விடுதிகளிலேயே முடங்க வேண்டிய சூழல் உருவானது. மேலும் ராமநாதபுரத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ராமநாதபுரம் பாம்பனில் 125 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 28 சென்டிமீட்டர் மழை பொழிவு குறுகிய நேரத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல் ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத வகையில் 44 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.