தஞ்சையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
Sep 26, 2025, 07:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Nov 21, 2024, 10:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ரமணியும் அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவரும் கடந்த 1 அரை வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இவர்களின் காதலை ஏற்க ரமணியின் பெற்றோர் மறுத்ததால், மதன்குமார் உடனான காதலை ரமணி கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்குமார், ரமணி பணியாற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஓய்வறையில் இருந்த ரமணியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரமணி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் ஆகியோர் ஆசிரியை ரமணியின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் கோவை செழியனை சூழ்ந்த அவர்கள், உடற்கூராய்வு முடிந்தவுடன் உடனடியாக உடலை பெற்றுச்செல்லுமாறு காவல்துறையினர் தங்களை நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் கோவை செழியன், இந்த சம்பவம் குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து, உடற்கூராய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியை ரமணியின் உடலுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஆசிரியை ரமணியின் உடல் அங்கிருந்து அவரது சொந்த ஊரான மல்லிப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டது.

Tags: teacher killedChinnamanai areatanjoreRamaniteacher stabbedMallipattinam Government High SchoolMadankumar arrest
ShareTweetSendShare
Previous Post

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

Related News

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

கட்சியின் மூத்த தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தயார் நிலையில் உள்ள படுக்கை வசதியுடன் தயாரிக்கப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில்கள்!

பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படம் – வெளியிட்ட இஸ்ரோ!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ரப்பர் பால் சேகரிக்கும் தொழில்பாதிப்பு!

குஜராத் : எரியும் ஸ்வஸ்திக் சின்னத்தில் கலைஞர்கள் நடனமாடி அசத்தல்!

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

கல்வராயன்மலை : துப்பாக்கிக் குண்டு தலையில் பாய்ந்து வாலிபர் உயிரிழப்பு!

60 வருட கால சேவை : ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்கள்!

கமுதி அருகே : காவல் சார்பு ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies