மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
மகாராஷ்டிரா பொருத்தவரையில் நல்லாட்சிக்கு நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள் அதேபோல் பாரத பிரதமரின் நல்ல திட்டங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தரும் காலம் வெகு தூரம் இல்லை.
பாஜக கூட்டணியில் இருந்து சென்றிருந்தால் எம்பிக்களால் செயலாற்ற முடியும். ஆனால் திமுக கூட்டணியில் இருந்து போகக் கூடியவர்கள் கத்தி பேச மட்டும் தான் முடியும்.
யானை மிதித்து இறந்தவர்கள் இரண்டு லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. அதேவேளையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் கிடைத்திருக்கும். தமிழகத்தில் அதிக நிவாரண நிதி பெற வேண்டும் என்றால் கள்ளச்சாராயம் குடிக்க வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.