புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் – புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து புதுச்சேரி மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதனால் கடலுக்கு செல்லாத மீனவர்கள் 200க்கும் மேற்பட்ட படகுகளை துறைமுக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.