திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நட்சத்திர ஏரியை சுற்றி கழிப்பறைகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தற்போது இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் நட்சத்திர ஏரியை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டருக்கு கழிவறைகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் படும் துயரத்தை கருத்தில்கொண்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் கழிவறை வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.