தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்று யோகாசனங்கள் செய்து அசத்தினர்.
குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் யோகா விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் மாணவர்கள் தனித்துவமான யோகாசனங்களை செய்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.