தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்திற்கு கயானா அதிபர் ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக கயானா சென்ற பிரதமர் மோடி, தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கத்தின் கீழ் செடியை நடவு செய்தார். அப்போது இயக்கத்தில் அதிபர் முகமது இர்பான் அலியும் இணைந்தார். இதற்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தாயின் பெயரில் ஒரு மரம் பிரசாரத்துக்கு அதிபர் முகமது இர்பான் அலி ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், மன் கி பாத் நிகழ்ச்சியில் தான் இதுகுறித்து மக்களிடையே பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.