அரசியலமைப்பு சட்டத்தால் தாம் சமூக, பொருளாதார மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர் அரசியலமைப்பு சட்டமே நாட்டின் பலம் என கூறினார். ஏழைகள் மற்றும் பட்டியல் சமூகத்திற்கு அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாகவே சம உரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரையும் ஒன்றிணைத்து, ஒன்றாக செயல்பட தூண்டுவதே நமது அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பம்சம் எனவும் அவர் கூறினார்.