சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையத்தில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நரிக்குறவர் காலணியில் இருந்து எம்ஜிஆர் நகர் வழியாக முட்டல் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலை வசதி கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடம் சென்ற போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.