மரக்காணத்தில் பெய்த கனமழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கி தேசமடைந்தன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இதனால், உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல் காட்சியளிக்கின்றன.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் உள்ள உப்பளங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.