ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வருகிறார். அந்த நிபந்தனைளை தளர்த்தக் கோரி அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.