இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லியில் ஜெ.பி. நட்டாவை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் அவர் வாழ்த்து கூறினார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஜெ.பி. நட்டா நல்ல உடல் ஆரோக்கியத்துடன், அனைத்து விதமான மகிழ்வும் பெற்று வாழ அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.