எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடின.
அப்போதும் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். இதனால், இரு அவைகளும் நாளை பகல் 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.