திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகிலேயே மேலும் ஒரு பாறை சரிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மகாதீப மலை அடிவாரப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக அங்குள்ள வ.உ.சி நகர் பகுதியில் பாறை உருண்டு குடியிருப்புகள் மீது விழுந்ததில் இரு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
இந்நிலையில், அப்பகுதிக்கு அருகிலேயே மேலும் ஒரு பாறை உருண்டு விழுந்துள்ள சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.