விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கிளை நதியான மலட்டாறு வழியாக பாய்ந்து ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது சில மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மரத்தில் ஏறி அமர்ந்துள்ளனர். இதேபோன்று, வாராகி அம்மன் கோயிலுக்குள் சென்று 5 பெண்கள் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், தங்கள் உயிரை பாதுகாக்க போராடி வரும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்பு படையினர் திணறி வருகின்றனர்.