அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள அவரது சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, புவனேஸ்வரில் உள்ள அவரது உருவ சிலைக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவபடத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், அம்பேத்கர் வகுத்த அரசமைப்பு சட்டத்தைக் காக்க தாம் கடமைப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.