கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது..
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரியின் முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுச்சேரி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.