நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம் பெருமாள்புரம் பேட்டை உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவானது. கனமழை காரணமாக நெல்லையின் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பயணிக்க முடியாமல் பொதுமக்களும் அவதியடைந்தனர்.