வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரி வேகமாக நிரம்பியது. ஏரியின் நீர்மட்டம் 46.8 அடியாக உயர்ந்த நிலையில், உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் லால்பேட்டை, திருநாரையூர், குமராட்சி, வெள்ளூர் உள்ளிட்ட 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதியடைந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.