சென்னை புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் சென்னை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூலக்கடை வழியாகச் சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் ரெட்டில்ஸ் செல்கிறது.
ஞாயிறு, வடகரை, கிராண்ட் லைன், உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் வட பெரும்பாக்கம் வழியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் தங்களது இருசக்கர வாகனங்களை தண்ணீரில் தள்ளி செல்கின்றனர்