தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து 88 கன அடியில் இருந்து 670 கன அடியாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 560 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.