சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியது.
இதனால் முதல்கட்டமாக நேற்று காலை முதல் ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மாலையில் 4,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.