நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
நெல்லையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரத்தில் பெய்த தொடர் கனமழையால் 150 ஹெக்டேர் பரப்பளவிலான வாழைகள், வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.
மேலும், ஆயிரத்து 117 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர் மற்றும் 210 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தானிய வகைகளும் வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கின. பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.