திருவள்ளூரில் தொடர் கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுப்பாரெட்டி பாளையம், பள்ளி பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதையடுத்து படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் கார்களை பாதுகாப்பு கருதி திருவொற்றியூர் – பொன்னேரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.