ராமநாதபுரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், நல்லாம்பட்டி பகுதியில் உள்ள நீரோடையில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாழம்பட்டி கொக்கரசன்கோட்டை, வி.சேதுராஜபுரம் , ராமலிங்கம் பட்டி உள்ளிட்ட 5 கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.
மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்த நிலையில், இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சிம்ரன் சீத் சிங் காலோன், அதிகாரிகளுடன் டிராக்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.