திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள புன்னக்காயல் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், புன்னக்காயல் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.
இதனால் குடியிருப்பு வாசிகள், வீட்டை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.