தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், கடலையூர் பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உளுந்து, பருத்தி, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இதுதவிர, காட்டுப்புரம், சிந்தலக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பார்வையிடவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.