கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், ஏற்பாடுகள் தொடர்பாக டிஐஜி சத்ய சுந்தரம் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேட்டியளித்த அவர், புத்தாண்டு தினத்தில் கடற்கரை சாலை செல்லும் ஒயிட் டவுன் பகுதி சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கு 6 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கடற்கரை சாலையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.