நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 8, 2025, 09:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இருவழிச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அதன் ஒருபகுதியாக குளத்தூரில் இருந்து நைனார் கோவில் வரை சுமார் 18 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய 60 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எப்போது பணிகள் முடியும் என 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர்.

அப்பகுதிகளில் விளையும் வேளாண் பொருட்களை விற்பனை செய்ய ராமநாதபுரத்திற்கோ அல்லது பரமக்குடிக்கோ கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பிரதான சாலையே படுமோசமாக உள்ளதால், விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்குள் காய்கள் கனிந்து விடக் கூடிய சூழல்தான் அங்கு நிலவுகிறது…

பணி நடைபெறும் சாலையில் ஒரு வாகனம் செல்லும்போது கிளம்பும் தூசி அடங்குவதற்கு சுமார் 5 நிமிடமாவது ஆவதாகவும்,  ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை கரடு முரடாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படும் துயரமும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உதவிக்கு அழைத்தால், இந்த சாலை வழியாக வருவதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே தயக்கம் காட்டுவதாகவும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். சாலைப் பணி விவகாரத்தை அதிகாரிகள் காதுகளுக்குக் கொண்டு சென்றால், கண்டுகொள்ளவே இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்…

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜா, “பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்திற்குள் தார் பரப்பும் பணி தொடங்கி விரைவாக பணிகள் முடிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக நத்தை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணியை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சுற்றுவட்டார கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: road constructionRamanathapuram East Coast Roadfour laneKulathur to Nainar KovilMadurairamanathapuramsivagangaMelur
ShareTweetSendShare
Previous Post

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் – வீடு வீடாக நடத்த சீமான் வலியுறுத்தல்!

Next Post

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தமிழக அரசின் பணிகள் நிறைவு – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies