கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பிரதமரின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
நம் நாட்டில் கொப்பரை உற்பத்தியில் கர்நாடகா அதிக பங்கு வகிக்கிறது என்றும், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகிய இரண்டும் ஏஜென்சிகளாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர மாநில அரசுகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.