வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கி இளம் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
துருவம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் அஞ்சலி என்ற இளம் பெண் வனப்பகுதியை ஒட்டிய வீட்டில் இருந்து வெளியே சென்ற போது சிறுத்தை தாக்கி உயிரிழந்தார்.
இதனால் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ட்ரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் 15 க்கும் மேற்பட்டோர் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.