உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயிலுக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தார். அப்போது அங்கு வருகை தந்த குழந்தைகளை கொஞ்சிய அவர், பொதுமக்கள் கொண்டு வந்த புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், மக்களின் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.