சபரிமலைக்கு அலங்கரித்து கொண்டு வரப்படும் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
சபரிமலைக்கு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை வாழைக்குலை, இளநீர் போன்றவற்றை வைத்து அலங்கரித்து கொண்டு வருகின்றனர்.
இவை எதிரே வரும் வாகன ஓட்டிகளை திசைதிருப்பும் வகையில் அமைவதால் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை அலங்கரிக்க கூடாது என பக்தர்களுக்கு கேரள மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் அறிவுறுத்தலை மீறி அலங்கரித்து கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், வாகனங்களை பறிமுதல் செய்து பக்தர்களை வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கின்றனர்.