இளைஞர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி நீதிமன்றம் அருகே கடந்த 20ம் தேதி இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.