மதுரையில் கைதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த உதவி சிறை காவலர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் உதவி சிறைக்காவலராக பணிபுரிந்து வரும் பாலகுருசாமி அங்கு கைதியாக இருந்த நபரின் மகளுக்கு காவல்துறை தேர்வில் உதவி செய்வதாக கூறி தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார்.
மேலும், கைதியின் மகள் மற்றும் பேத்திக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்த நிலையில், பாலகுருசாமியை ஆரப்பாளையம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு வர சொல்லிய கைதியின் மகள் உறவினர்களுடன் இணைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இந்த வீடியோ இணைத்தில் வைரலான நிலையில் பாலகுருசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், மதுரை மாநகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாலகுருசாமியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.