சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நாகேந்திரன், வினோத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த நாகேந்திரன் வினோத்தின் வீட்டில் இருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்துள்ளார்.
இதில் அங்கிருந்த 4 வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலான நிலையில், வினோத் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து வாகனங்களுக்கு தீ வைத்த நாகேந்திரனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.