ரஷ்யாவில் கடலில் கலந்த நான்காயிரம் டன் கச்சா எண்ணெய்யை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கெர்ச் ஜலசந்தியில் கடந்த வாரம் 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.இதில் சுமார் 9 ஆயிரம் டன் எரிபொருள் கொண்டு செல்லப்பட்டது. அனபா என்ற பகுதியில் சென்றபோது தாக்கிய புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின.
இதனால் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. தொடர்ந்து கச்சா எண்ணெய் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.