2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் அவர். அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2026 இல் அமையும் என்றும்இ அதில் நிச்சயமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இரட்டை இலை உள்ளது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தங்களை ஏமாற்றிக் கொள்ளாமல் அதிமுக தொண்டர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.