முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.
வயது முதிர்வால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் இரவு 9.15 மணியளவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு, நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.