திமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், திமுக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்தும் ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர். மாநில செயலாளர் யுவராஜ் தர்மேந்திரா உட்பட்ட ஏபிவிபி மாணவர்களை மாநில அலுவலகத்தில் புகுந்து போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய முடியாத காவல்துறை நீதி கேட்டு போராடிய மாணவர்களை கைது செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.