அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டுப் போராடிய ஏபிவிபி மாணவர்களை கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் காவல்துறையை கண்டித்து நாடு முழுவதும் ஏபிவிபி களமிறங்க நேரிடும் என ஏபிவிபி தென் தமிழக மாநில செயலாளர் ஹரி கிருஷ்ணகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இதனை கண்டித்தும், திமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் காவல்துறையை கண்டித்து நாடு முழுவதும் ஏபிவிபி போராட்டத்தில் களமிறங்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
“