நெல்லையில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மற்றும் ரிசார்ட்-க்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், 7 நாட்கள் அவகாசம் முடிந்தபின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேரள அரசு தெரிவிக்கவில்லை என்றும், விதிமீறல் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து கழிவுகள் கொண்டு வரப்படுவதை தடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.